புதன், 1 அக்டோபர், 2014

நிகழ்வில் பரிசு பெற்ற கவிதைகள்! (28.9.2014)

விழுதுகள்!

யானை ஆயிரம் கட்டி
அருகே பரி
பத்தாயிரம் கட்டி
பல்லாயிரம் வீரர்
படுத்துறங்கி
பாதியிடம் மீதமுள்ள
ஆலமர விழுது
நாங்கள் வாழும் வீடு!

காளையரைச் சுண்டி இழுக்கும்
கன்னியரின் ஒற்றை சடை…
பிள்ளைகளைத் தாலாட்டும்
நல்லதொரு ஊஞ்சல்…
வாலா வயது
ஆலம் விழுது!

ஆணிவேரை
இழந்து நிற்கும்
பெற்றோரைத்
தாங்கி நிற்கும்
பிள்ளைகள் நாங்கள்…

பொன். கர்ணன்.விழுதுகள்!

அறிவியலுக்கும் அடங்காத வியப்பு
விழுதின் மரபு
விதையிலா? விருட்சத்திலா?
வேரில் வளர்ந்த மரத்தை
விழாமல் தாங்கும் விழுதுகள் நிலத்தே!

விழுதுகள் ஆலில் மட்டுமா?
ஆட்களிலும் மழலையாய்த்
தந்தவர்களைத் தாங்கி நிற்கிறது
தலையில் கனத்துடன் தரையில்…

வேர்கள் நீரைத் தொடாததால்
விழுதுகள் பூமியைத் தொடப்போராடுகின்றன
மனிதர்களில் மாற்றமின்றித்
தங்களைச் சுமந்தவர்களுக்காக
செங்கல்லைச் சுமக்கின்றன விழுதுகள்

ஆற்றின் நடுவே ஆலமரம்
விண்ணை நோக்கி
விரல் நீட்டுகிறது
தண்ணீருக்காக விழுதுகள்…

அடையாரு ஆலமரம் அகிலம் போற்றுமே
அதன் விழுதுகள் யாவும் அடிமரம் காட்டுமே
மனித விழுதுகள் தனிக்குடி ஓட்டுமே
மீளாத துன்பமெனில் பொதுக்குடி ஒட்டுமே

மனித மரங்கள் மதுவில் தள்ளாடுகிறது
வேர் விழப்போவது தெரியாமலும்
தன் தாயுடன் தாம் அழப்போவது புரியாமலும்
விழுதுகள் வீதியில் சில்லாடுகிறது…

விரைவில் ஒரு விதி செய்வோம்
விழுதுகள் வாழ நல் வழிசெய்வோம்!


கவிஞர். சின்தன. பாலுசாமி

திங்கள், 29 செப்டம்பர், 2014

28.9.2014 நிகழ்வுப் புகைப்படங்கள்!


மரப்பாச்சிப் பொம்மைகள் நூலைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கும் கவிஞர் சிலம்புச் செல்வி அவர்கள்...


பார்வையாளர்கள்...


பார்வையாளர்கள் மற்றும் கவிஞர்கள்...


'வடித்ததில் பிடித்தது' என தனது கவிதையைப் பகிர்ந்து கொள்ளும் கவிஞர் தி.வரதராஜ பெருமாள்...


பார்வையாளர்கள்...


பார்வையாளர்கள்...


'படித்ததில் பிடித்தது' கூறும் கவிஞர் இரா.சக்திவேல்...


'படித்ததில் பிடித்தது' பகுதியில் கவிதைகள் கூறும் கவிஞர் சின்தன.பாலுசாமி


படித்ததில் பிடித்ததுகூறும் பொன்.வைத்தியலிங்கம்...


பார்வையாளர்கள்...


ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன்...


பார்வையாளர்கள்...


படித்ததில் பிடித்தது கூறும் கவிஞர் அண்ணாதுரை


படித்ததில் பிடித்தது கூறும் கவிஞர் பொன்.கர்ணன்...


தன் கருத்துக்களைப் பகிர்கிறார் ஆசிரியர் சதாசிவம்...


பார்வையாளர்கள்..


எழுத்தாளர் பூமலை.மணிவண்ணன்.

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

பரிசு பெற்ற கவிதைகள் (31.8.2014)ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்களி கவிதை...

ஆதி மனிதன் வெட்கப் பட்டான்
ஆடை பிறந்தது
பட்டையாய்... இலையாய்... தோலாய்...

பிறந்த மனிதர்கள்
மண்ணைத் தொடுமுன்
தொட்டனர் உன்னை...

நாங்கள் உருமாறும்போது
நீயும் மறவாமல் மாறுகிறாய்
எங்கள் விருப்பத்திற்கு இணங்க...

பருவத்திற்கு மட்டுமா உன்னை
மாற்றிக் கொண்டு மகிழ்கிறோம்?
பருவகாலத்திற்கும்தான்...

அணிவது மனிதர்கள் மட்டுமா?
மயிலுக்குப் போர்த்தினோம்...
குரங்கிற்கும் கொடுத்தோம்...

ஆள்பாதி ஆடைபாதி என
அடைமொழி பிறந்தது
அதில் ஆடையே சிறந்தது...

சிலருக்குப் பட்டாடையில்
பவனி செல்கிறாய்...
பலருக்கு வட்டாடையில்
வாழ்க்கை தருகிறாய்...

பிறப்பு முதல் இறப்பு வரை
பிணைந்தோம்
முன்னதில் நான் கட்டிக் கொள்கிறேன்...
பின்னதில் என்னை கட்டிச் செல்கிறாய்...

புத்தாடை அணியும் போது
புத்துணர்வு வருகிறது -ஆம்
அது
நீ பிறந்த பூவின் மணம் தருகிறது...!

---


ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சிந்தனை செல்வியின் கவிதை...

இருப்பவன் கிழித்துப் போடுகிறான்
இல்லாதவன் கிழிந்ததைப் போடுகிறான்

மனிதன்
நாகரீகத்தை
பண்பாட்டை
கலாச்சாரத்தை
வசதியை
வறுமையை
எளிமையை
தன்மையை -எனப்
பலவற்றையும் அடையாளம் காட்டும்
கண்ணாடியாய்...

மனிதர்களால் -நான்
அடையாளம் பெறவில்லை
என்னால்தான் அவர்கள்
அடையாளம் பெறுகிறார்கள்...


31.8.2014 நிகழ்வுப் புகைப்படங்கள்!


தூவல் இலக்கிய வட்டத்தின் ஐந்தாவது நிகழ்வை (31.8.2014) த் தொடங்கி வைத்து தொடக்கவுரை ஆற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...
---


இன்றைய நிகழ்வைத் தொகுத்து வழங்கும் கவிஞர் வரதராஜன் அவர்கள்.
---


தனது கவிதை அனுபவத்தை அரங்கில் பதினைந்து நிமிடங்கள் பகிர்ந்துகொள்கின்றார் பாவலர் , சித்த மருத்துவர் பெரங்கியம் வரதராஜன் அவர்கள்...
---


கவிஞர் நிலவன் (இடம்), சிறப்பு விருந்தினர் முனைவர் பட்டி.சு. செங்குட்டுவன் அவர்களுடன்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் வினோதன் அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் சிலம்புச் செல்வி அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் விஸ்வபாரதி அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் கர்ணன் அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் ஒகளூர் நிலவன் அவர்கள்...
---


இன்றைய போட்டிக் கவிதையை 'ஆடை' என்ற தலைப்பில் வழங்கும் கவிஞர் அண்ணாதுரை அவர்கள்...
---


நிகழ்வைத் தொகுத்து வழங்குகிறார் கவிஞர் வரதராஜ பெருமாள்...
---


கவிஞர் நிலவனுடன் சிறப்பு விருந்தினர் முனைவர் பட்டி சு. செங்குட்டுவன் மற்றும் பார்வையாளர்கள்...
---


கவிஞர் சிலம்புச் செல்வியின் 'சிந்தனைப் பூக்கள்' கவிதை நூலைத் திறனாய்வு செய்து கட்டுரையாகச் சமர்ப்பிக்கிறார் பேராசிரியர் சௌ. வீரபாண்டியன் அவர்கள்...
---


தனது ஆய்வுக் கட்டுரையா கவிஞர் சிலம்புச் செல்வியிடம் சமர்ப்பிக்கிறார் பேராசிரியர் சௌ. வீரபாண்டியன் அவர்கள்...
---


சிறப்பு விருந்தினை அறிமுகப் படுத்தும் கவிஞர் ஒகளூர் நிலவன்...
---


சிறப்புரையாற்றும் முனைவர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


பார்வையாளர்கள்...
---


இம்மாத போட்டிக்கான தலைப்பில் பரிசு பெற்ற கவிஞர்களின் பெயர்களை வெளியிடுகிறார் சித்த மருத்துவர் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---


ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சின்தன. பாலுசாமி அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார் சிறப்பு விருந்தினர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...
---


ஆடை என்ற தலைப்பில் பரிசுபெற்ற கவிஞர் சிந்தனை செல்வி அவர்களுக்குப் பரிசு வழங்குகிறார் சிறப்பு விருந்தினர் பட்டி சு. செங்குட்டுவன் அவர்கள்...


சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் பாவலர் வரதராஜன் அவர்கள்...
---


இன்றைய நிகழ்வை நிறைவு செய்யும் வகையில் நிறைவுரை ஆற்றுகிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன்...
---கவிஞர் பா. திருமுருகன் அவர்கள் எழுதிய 'ஊதாங்கோலும் ஒருதுண்டு நெருப்பும்...' என்ற நூலை ஆய்வுசெய்ய அகரம் அமுதனிடமிருந்து அந்நூலைப் பெற்றுக் கொள்கிறார் கவிஞர் சிந்தனை செல்வி...
---


சிறப்பு விருந்தினர்ருடன் ....