செவ்வாய், 29 ஜூலை, 2014

பரிசு பெற்ற கவிதைகள்! (27.07.2014)



முதல் பரிசு பெற்ற கவிஞர் சக்திவேலின் கவிதை...

புதியதோர் உலகம் செய்வோம்! கவிஞர் சக்திவேல்

எத்தனை ஆண்டுகள் கழிந்தன நாம்
முக்கிய வழிகளில் சென்றதில் –நம்மை
சொக்கிய வழிகள் சிலவாயின் நாம்
சிக்கிய வழிகள் பலவாகும் –அதில்
முக்கிய காரண மெதுவாயின் –அது
குறுகிய வேற்றுமை மதமு மொன்றாகும்!

உருகிய நிலையில் உறவுகள் நிற்க
மருகிய நிலைக்குச் செல்லாத மதங்கள் –எனவே
புதியதோர் பூவுலகுக்கு அங்கே
ஒற்றுமை ஒன்றையே வளர்த்திடுவோம்!

ஓலைச் சுவடிகள் ஒவ்வொன்றாய் நிறைந்தன
உன் வெற்றி சங்கென்றாய் –தமிழா!
ஓடும் ஒவ்வொரு தருனமெல்லாம் ஓரமாய்
நீயும் ஓய்ந்து நின்றாய்! –அதனால்
தோலில் ஏறிய தோல்வியெல்லாம் –உன்னில்
வேதனை வேல்வி வளர்க்கின்றன –அதில்
சாதனை ஆசை சருகொன்றாய் நீயும்
தணலில் வீழ்ந்து எரிகின்றாய் –எனவே
புதியதோர் உலகம் செய்வோம் –அங்கே

உறக்கம் தவிர்த்து சாதனை சரிதம் படைப்போம்.

கவிஞர் சக்திவேல்.


----


இரண்டாம் பரிசு பெற்ற கவிஞர் விஸ்வபாரதி அவர்களின் கவிதை...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக