செவ்வாய், 1 ஜூலை, 2014

29.06.2014 அன்றைய நிகழ்வுப் புகைப்படங்கள்! (2)


தனது கவிதையைப் பதிவு செய்கிறார் கவிஞர் குணசேகரன் அவர்கள்...

---


எழுதுகோல் என்ற தலைப்பிலான போட்டிக் கவிதையை வாசிக்கிறார் கவிஞர் பொன். கர்ணன் அவர்கள்...

முதற்பரிசு பெற்ற கவிஞர் பொன். கர்ணன் அவர்களின் கவிதை...

எழுதுகோல்! –கவிஞர் பொன். கர்ணன்

அகத்தியர் கையில் இருந்தபோது
மருத்துவம் கொடுத்தாய்…

தொல்காப்பியன் கையில் இருந்தபோது
இலக்கணம் பிரித்தாய்…

சாணக்கியன் கையில் இருந்தபோது
நீதி உரைத்தாய்…

வள்ளுவன் கையில் இருந்தபோது
முப்பால் தெளித்தாய்…

கம்பனின் கையில் இருந்தபோது
இதிகாசம் தந்தாய்…

காரல் மார்க்ஸ் கையில் இருந்தபோது
மூலதனம் பகிர்ந்தாய்…

பாரதி கையில் இருந்தபோது
தேசியம் கோர்த்தாய்…

கண்ணதாசன் கையில் இருந்தபோது
காதல் கசிந்தாய்…

வைரமுத்து கையில் இருந்தபோது
வாழ்வியல் பதிந்தாய்…

இந்த
மக்குப்பயல் கையில் வந்து
என்னப் பண்ணத் துடிக்கிறாய்
எழுதுகோலே?!!!

-பொன். கர்ணன்.


---


எழுதுகோல் என்ற தலைப்பிலான தனது கவிதையையும் வாசிக்கிறார் தூவல் இலக்கிய வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...

---


போட்டிக் கவிதைகளில் சிறந்த கவிதைகளைத் தேர்ந்தெடுத்த பாவலர், சித்தமருத்துவர் வரதராசன் அவர்கள்...

அரங்கில் கவிஞர்கள் கவிதை வாசித்து முடித்த உடனேயே அந்த வாசிப்பைச் செவியுற்றவண்ணமிருந்த பாவலர் வரதராசன் அவர்கள் மேடையேறி வென்றவர்களின் பெயர்களை அறிவிக்கிறார்....

----


இப்படி ஒரு அழுத்தம் நிறைந்த (போட்டிக் கவிதைகளில் சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்தல்) வேலையை என்னிடம் தரலாமா? என ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்களை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் பாவலர் வரதராசன் அவர்கள்...

----


நிகழ்ச்சியைக் கலகலப்பாக வழிநடத்தும் எழுத்தாளர், ஆசிரியர் பூமலை. மணிவண்ணன் அவர்கள்...

-----


நிகழ்ச்சியின் அடுத்த பகுதியாக கவிஞர் தியாக. ரமேஷ் அவர்களின் 'மரப்பாச்சிப் பொம்மைகள்' என்ற நூலை ஆய்வுசெய்து கட்டுரை சமர்ப்பிக்குமாறு அழைப்பு விடுக்கிறார் நிகழ்ச்சி நெறியாளர் எழுத்தாளர் பூமலை. மணிவண்ணன் அவர்கள்...

-----


மரப்பாச்சிப் பொம்மைகள் நூல் பற்றிய தனது ஆய்வுக் கட்டுரையைப் பகிர்கிறார் கவிஞர் சிவராமன் அவர்கள்...

-----பார்வையாளர்கள்...

---


மரப்பாச்சிப் பொம்மைகள் நூலாய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறார் ஒருங்கிணைப்பாளர் அகரம் அமுதன் அவர்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக